கல்லூரியில் நடைபெற்ற மருத்துவ பரிசோதனை! மூன்று மாணவிகள் கர்ப்பமாக இருப்பது அம்பலம்

இந்தியாவில் உள்ள ஒரு கல்லூரியில் மருத்துவர்கள் பொதுவான மருத்துவ பரிசோதனை செய்த போது மூன்று மாணவிகள் கர்ப்பமாக இருப்பது தெரியவந்துள்ளது. தெலுங்கானா மாநிலத்தின் ஹைதராபாத்தில் தனியார் கல்லூரி ஒன்று அமைந்துள்ளது. இங்குள்ள இளநிலை பட்டப்படிப்பு படிக்கும் மாணவிகளுக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

அப்போது மூன்று மாணவிகள் கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. இது தொடர்பான விசாரணையில் அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளது. அதாவது மூன்று மாணவிகளும் தங்கள் வீட்டருகில் வசிக்கும் நபரால் தாங்கள் பலாத்காரம் செய்யப்பட்டதாக கூறியுள்ளனர்.

ஆனால் குற்றவாளிகளின் பெயரை மாணவிகள் வெளியிடவில்லை என கூறப்படுகிறது. மாணவிகள் கூறும் தகவல் உண்மையா எனவும் அப்படி உண்மை என்ற பட்சத்தில் குற்றவாளிகள் யார் எனவும் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. மாணவிகளின் எதிர்காலம் கருதி அவர்களின் பெயர்கள் மற்றும் இன்னபிற விபரங்கள் வெளியிடப்படவில்லை.

முகநூலில் நாம்