
யாழ்ப்பாணம், திருநெல்வேலி கலாமன்றம் விளையாட்டுக் கழகமும், “பி.பி.கே பார்ட்னர்ஷிப்” வீரர்களும் பங்குபற்றிய கலாமன்றம் பிறீமியர் லீக் தொடரில் சூரியா சுப்பர் கிங்ஸ் சம்பியனானது.
முத்துத்தம்பி மகா வித்தியால மைதானத்தில் நேற்று முன்தினம் நடைபெற்ற இறுதிப் போட்டியில் பவர் கிட்டர்ஸை வென்றே சுப்பர் கிங்ஸ் சம்பியனானது.

இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய பவர் கிட்டர்ஸ், 10 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 57 ஓட்டங்களைப் பெற்றது. பதிலுக்கு, 58 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய சுப்பர் கிங்ஸ் 7.5 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்த நிலையில் வெற்றியிலக்கையடைந்தது.