கர்ப்பிணி பெண்கள், குழந்தைகளிற்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய வேண்டுகோள்

நாட்டிலுள்ள கர்ப்பிணித் தாய்மாருக்கான மாதாந்த பரிசோதனை நடவடிக்கைகளுக்கு வரையரை விதிக்க சுகாதார அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. நாட்டில் பரவிவரும் கொரோனா தொற்றை கருத்திற்கொண்டு, இந்த நடவடிக்கை முன்னெடுக்கபட்டுள்ளது.

அந்தவகையில் , 8 மாதங்கள் பூர்த்தியான கர்ப்பிணித் தாய்மார்கள் மாத்திரம் பரிசோதனைகளுக்காக வருகை தருமாறும், ஏனையோர் தேவை ஏற்படும் பட்சத்தில் மாத்திரம் வருகை தருமாறும் சுகாதார அமைச்சின் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.

ஆத்துடன் குறிப்பாக 8 மாதங்கள் பூர்த்தியாகாத கர்ப்பிணி தாய்மார்களின் வீடுகளுக்கு சென்று சுகாதார அதிகாரிகள் பரிசோதனைகளை நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். இதேவேளை , எதிர்வரும் இரண்டு வாரங்களுக்கு குழந்தைகளுக்கு ஏற்றப்படும் ஊசியை ஏற்றாதிருக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.

மேலும் ஏனையோர் தேவையேற்படும் பட்சத்தில் மாத்திரம் வெளியே செல்லுமாறும், வீணாக வெளியே சுற்றித்திரிவதை தடுக்குமாறும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.

முகநூலில் நாம்