கரைச்சி பிரதேச சபையின் அதிகரித்த ஆதனவரி குறைக்க வாக்கெடுப்புக்கு கோரிய எதிர்தரப்பினர் மறுத்த தவிசாளர்

கரைச்சி பிரதேச சபையின் அதிகரித்த ஆதனவரி குறைக்க  வாக்கெடுப்புக்கு
கோரிய எதிர்தரப்பினர் மறுத்த  தவிசாளர்

 கிளிநொச்சி கரைச்சி பிரதேச சபையால் அறவிடப்பட்டு வருகின்ற 10 வீத
அதிகரித்த  ஆதனவரியை குறைக்குமாறு கோரி மூன்றாவது தடவையாக
இடம்பெற்ற விசேட சபை அமர்வில் ஆதனவரியை ஐந்து வீதத்திற்குள் குறைக்கும்
தீர்மானத்தை வாக்கெடுப்புக்கு விடுமாறு எதிர் தரப்பு உறுப்பினர்கள்
கூட்டாக கோரிக்கை விடுத்த போதிலும் தவிசாளர் அதற்கு மறுப்புத் தெரிவித்து
விட்டார்.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது

ஆதனவரி குறைப்பு தொடர்பில்  விசேட சபை அமர்வுக்கு கரைச்சி பிரதேச சபையின்
எதிர்தரப்பு உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்தமைக்கு அமைவாக இன்று (04)
தவிசாளர் அ. வேழமாலிகிதன் தலைமையில்  இடம்பெற்றது இதன்போது கரைச்சி
பிரதேச சபையால்  பொது மக்களிடம் ஆதனவரி 10 வீதமாக அறவிடப்பட்டு
வருகின்றமை மக்கள் மீது அதிக வரி சுமையை சுமத்துவதாகும். கிளிநொச்சி
மாவட்டம் வறுமையில் முன்னிலையில் உள்ள மாவட்டம் எனவே இந்த நிலையில் இங்கு
அதிகரித்த வீதத்தில் ஆதன வரியை அறவிடுவது ஏற்றுக்கொள்ள முடியாது. எனவே
அடுத்த வருடம் முதல் ஆதன வரியை ஐந்து வீதத்திற்குள் குறைக்க வேண்டும்
எனவும். இதனை சபையில் வாக்கெடுப்புக்கு விடுமாறும் எதிர்தரப்பு
உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்தனர்.

ஆனால்  ஆதன வரியை குறைக்கும்  தீர்மானத்தை வாக்கெடுப்புக்கு விட முடியாது
எனத் தெரிவித்த தவிசாளர்  மக்களின் கருத்துக்கள் பெறப்பட்டே  குறைப்பு
தொடர்பில் தீர்மானம் நிறைவுற்ற முடியும் எனக் குறிப்பிட்ட போது
குறுக்கிட்ட சுயேச்சைக் குழு பிரதேச சபை உறுப்பினர் இளங்கோ ஆதன வரி 10
வீதம்  என தீர்மானித்த  போது மக்களின் கருத்துக்கள் பெறப்பட்டா
தீர்மானித்தீர்கள் என கேள்வி எழுப்பிய  போது தவிசாளர் அதற்கு
பதிலளிக்கவில்லை. இந்தநிலையில் ஆதனவரி குறைப்புக்கு ஆதரவாக உள்ளவர்கள்
கைளை உயர்த்திகாட்டுங்கள் என சுயேச்சைக் குழு உறுப்பினர் இளஙகோ கோரிய
போது சபையில் இருந்த அனைத்து எதிர்தரப்பு உறுப்பினர்களும் ஆதனவரி
குறைப்பு ஆதரவாக தங்களின் கைகளை உயர்த்தி  ஆதரவுதெரிவித்துள்ளனர்.

இதன் போது மீண்டு கருத்துரைத்த தவிசாளர் 2021 இற்கான வரவு செலவு திட்டம்
வருகின்ற 9.11.2020 நிறைவேற்றப்பட்ட பின்னர் டிசம்பர் 31 இற்கு முன் ஆதன
வரி குறைப்பு தொடர்பில் தீர்மானிக்கப்படும் எனத் தெரிவித்தார்  ஆனால்
அறவிடப்படும் வீதத்தை தெரிவிக்குமாறு உறுப்பினர்கள் கோரிய போது  அதனை
அப்போது பார்ப்போம் எனத் தெரிவித்து விசேட சபை அமர்வை நிறைவு செய்தார். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முகநூலில் நாம்