
முல்லைத்தீவு மாந்தை கிழக்கு பிரதேசத்தின் கரும்புள்ளியான் குடிநீர்விநியோகத்திற்கு உலக வங்கியினால் ஒதுக்கப்பட்ட ஆயிரம் மில்லியன் ரூபாநிதியினை அந்த மக்களுக்கே மீளவும் பெற்றுக்கொடுக்குமாறு முன்னாள்பாராளுமன்ற உறுப்பினர் மு. சந்திரகுமார் ஜனாதிபதிக்கு கடிதம் ஒன்றைஎழுதியுள்ளார்.

குறித்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவதுகரும்புள்ளியான் குடிநீர் விநியோகத்திட்டத்திற்கு ஒதுக்கப்பட்ட நிதியானதுதென்பகுதிக்கு மாற்றப்பட்டுவிட்டதாக குறித்த பிரதேச மக்களும் மக்கள்அமைப்புக்களும் கவலை தெரிவித்துள்ளன. இவ்விடயம் தொடர்பில் அப் பிரதேசமக்கள் எனது கவனத்திற்கும் கொண்டுவந்துள்ளனர்.கரும்புள்ளியான் குடிநீர் விநியோகத் திட்டம் ஆரம்பிப்பதற்கு 12.01.2022ஆம் திகதி பத்திரிகையில் கேள்வி கோரல் விளம்பரம் செய்யப்பட்டு11.02.2022 வரை விண்ணப்ப முடிவு திகதியும் குறிப்பிடப்பட்டிருந்தது.இதற்காக ஆயிரம் மில்லியன் ரூபா நிதியை உலக வங்கி ஒதுக்கீடு செய்துள்ளது.ஆனால் இன்றுவரை இத்திட்டத்திற்கான எவ்வித பணிகளும் ஆரம்பிக்கப்படவில்லை.ஆனால் இதற்கு பின்னரான காலத்தில் புதிய புதிய குடிநீர் திட்டங்களைஆரம்பிப்பதற்கு கேள்வி கோரல்கள் பத்திரிகைகளில் பிரசுரிக்கப்பட்டுளளன.இது பொது மக்கள் மத்தியில் பலத்த சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. எனவேதான் அவர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதியை தங்களுக்கே மீளவும்பெற்றுதருமாறு கோரியுள்ளனர்.

குடிப்பதற்கு முற்றிலும் பொருத்தமற்ற நிலத்தடி நீரை கொண்டுள்ள பிரதேசம்என்பதனால் வருடந்தோறும் சிறுநீரக நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துச்செல்கிறது. இதுவொரு ஆபத்தான நிலைமை அங்குள்ள வருங்கால சந்ததியினரையாவதுசிறுநீரக நோயிலிருந்து பாதுகாக்க வேண்டும் எனவேதான் கரும்புள்ளியான்குடிநீர் திட்டத்திற்கு என ஒதுக்கப்பட்ட நிதியை அந்த மக்களின் நலன்கருதிமீளவும் அவர்களுக்கே பெற்றுக்கொடுக்குமாறு கேட்டுக்கொள்கின்றேன். எனக்அக்கடித்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.