கரீபியன் பிரிமீயர் லீக்: போட்டி அட்டவணையை வெளியிட்டது வெஸ்ட் இண்டீஸ்!

ஐபிஎல், பிக் பாஷ் டி20 லீக்கை போன்று வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் போர்டு கரீபியர் பிரிமீயர் லீக் என்ற பெயரில் ஆண்டுதோறும் டி20 லீக் தொடரை நடத்தி வருகிறது.

இந்த வருடத்திற்கான டி20 லீக் தொடர் ஆகஸ்ட் 18-ந்தேதி தொடங்கி செப்டம்பர் 10-ந்தேதி வரை நடைபெறும் என வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் போர்டு தெரிவித்துள்ளது.

ஆறு அணிகள் பங்கேற்கும் இந்தத் தொடரில் 33 போட்டிகள் நடைபெற இருக்கிறது. தாராபோவில் உள்ள பிரையன் லாரா கிரிக்கெட் அகாடமி, போர்ட் ஆஃப் ஸ்பெயினில் உள்ள குயின்ஸ் பார்க் ஓவல் ஆகிய இரண்டு மைதானங்களில் போட்டிகள் நடைபெற இருக்கின்றன.

அரையிறுதி போட்டிகள், இறுதி போட்டி லாரா கிரிக்கெட் அகாடமி மைதானத்தில் நடைபெறும். முதல் ஆட்டத்தில் கடந்த ஆண்டு 2-வது இடம் பிடித்தது கயானா அமேசான் வாரியர்ஸ் – டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. 2-வது ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் பார்படோஸ் டிரிடென்ட்ஸ் – செயின் கிட்ஸ் அண்டு நேவிஸ் பேட்ரியாட்ஸ் அணிகள் மோதுகின்றன.

போட்டிகள் அனைத்தும் ரசிகர்கள் இன்று பயோ-செக்யூரிட்டி சூழ்நிலையில் நடத்தப்பட இருக்கிறது. கொரோன வைரஸ் தொற்றுக்கு எதிரான தடுப்பு நடவடிக்கை வழிகாட்டு நெறிமுறைகள் கடுமையான வகயைில் பின்பற்றப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் தொற்றுக்குப்பின் நடைபெறும் முதல் டி20 லீக் இதுவாகும்.

முகநூலில் நாம்