கம்பஹா பகுதி மக்களுக்கு முக்கிய அறிவிப்பு

கம்பஹா – யக்கல பகுதிகளில் நாளை 28 மணிநேரம் நீர் விநியோகம் துண்டிக்கப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.

இதற்கமைய நாளை பிற்பகல் 2 மணி முதல் மறுநாள் மாலை 6 மணிவரை இவ்வாறு நீர் துண்டிப்பு அமுல்படுத்தப்பட்டுள்ளது.

இதற்கமைய, கம்பஹா மாநகர சபைக்குட்பட்ட பகுதிகள், கொழும்பு – கண்டி வீதியின் மிரிஸ்வத்த சந்தியில் இருந்து அலுத்கம – போகமுவ தேவாலயம் வீதி வரை இந்த நீர் தடை அமுலாகும்.

கொழும்பு – கண்டி பிரதான வீதியின் யக்கல பாலத்தில் பொறுத்தப்பட்டுள்ள தற்காலிக நீர் கட்டமைப்பில் மேற்கொள்ளப்படவுள்ள திருத்தப்பணிகள் காரணமாக இவ்வாறு நீர் விநியோகம் துண்டிக்கப்படுவதாக தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முகநூலில் நாம்