கமநல சேவை நிலையத்திற்கு முன்பாக விவசாயிகள் கவனயீர்ப்பு போராட்டம்

கிளிநொச்சி அக்கராயன் குளம் கமநல சேவை நிலையத்திற்கு முன்பாக விவசாயிகள் 07.07.2022 இன்றைய தினம் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றி முன்னெடுத்திருந்தனர்.

கமநல சேவை நிலையத்திலிருந்த 1500 கிலோ யூரியா கடந்த
சனிக்கிழமை காணாமல் போயுள்ளதாகவும் உண்மை நிலையை அதிகாரிகள் தெரிவிக்குமாறு கோரி குறித்த கவனயீர்ப்பு போராட்டத்தினை முன்னெடுத்திருந்தனர்.

கவனயீர்ப்பு போராட்டகாரர்கள்  யூரியா எங்கே, இராணுவத்திற்கு
வழங்கப்பட்டதா அதிகாரிகள் களவா?, எங்கே யூரியா எவர் கைக்கு போனது, எங்களுக்கு சேதனம் உங்களுக்கு யூரியா சீதனமா! என பல பதாகைகளை ஏந்தியவாறு குறித்த கவனயீர்ப்பு போராட்டத்தில் முன்னெடுத்திருந்தனர்.

இது தொடர்பாக   கமநல சேவை நிலைய அதிகாரிகளிடம் வினவிய போது 30 பை யூரியா அக்கராயன் கமநல சேவை நிலையத்திலிருந்து பரந்தன கமநல சேவை நிலையத்திற்கு
மேட்டு நிலப் பயிர்ச் செய்கையாளர்களுக்கு வழங்கு வதற்கு  கொண்டு செல்லப்பட்டதாக தெரிவித்தனர்.  ஆனால் இது தொடர்பில்  விவசாய அமைப்புகளுக்கு எதுவும் அறிவிக்கப்படவில்லை என விவசாயிகள் தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முகநூலில் நாம்