
7 மில்லியன் டொலர்களைச் செலுத்த முடியாமல் சுமார் 55 நாட்களாக இலங்கை
கடற்பரப்பில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மசகு எண்ணெய் கப்பலிலிருந்த
மசகு எண்ணெய்யை இறக்கும் பணிகள் ஆரம்பமாகியுள்ளதாக மின்சக்தி மற்றும்
எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர சனிக்கிழமை தெரிவித்துள்ளார்.
இந்த மசகு எண்ணெய் கப்பலின் விநியோகஸ்தருக்கு பணம் வழங்குவதற்கான புதிய
முறைமை ஒப்புக் கொள்ளப்பட்டதாகவும் அமைச்சர் கூறியுள்ளார்.