கனடாவில் பலியான தமிழ்ச் சிறுமி! தீவிர விசாரணைகளில் பொலிஸார்

கனடா – மொன்றியல் பகுதியில் நேற்று முன்தினம் இடம்பெற்ற தீ விபத்தில் 12 வயதுடைய தமிழ்ச் சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வீட்டின் அடித்தளத்தில் சிக்கிய சிறுமி தீக்காயங்கள் மற்றும் புகையை சுவாசித்ததன் காரணமாக உயிரிழந்துள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சிறுமி தீயணைப்பு வீரர்களால் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

தனது பிள்ளையின் மரணச் செய்தியைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த சிறுமியின் தாயார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் தொடர்பில் அந்நாட்டு பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்துள்ளடன் குறித்த பகுதியில் உள்ள வீடுகளில் புகை எச்சரிக்கை கருவி பொருத்தப்பட்டுள்ள முறைமை குறித்து ஆராயப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

முகநூலில் நாம்