கதைமாமணி மாஸ்டர் சிவலிங்கத்திற்கு சிலை திறந்து வைப்பு

இலங்கையின் புகழ்பெற்ற கலைஞர் கலாபூசணம் கதைமாமணி மறைந்த மாஸ்டர் சிவலிங்கத்திற்கு மட்டக்களப்பில் தொழில் நுட்பக் கல்லூரிக்கு முன்னால் சிலை நிறுவப்பட்டு, இன்று (30) காலை திறந்து வைக்கப்பட்டது. 

கல்லடி சிவானந்தா வித்தியாலய பழைய மாணவர்களான சிவானந்தியன் சகபாடிகள் அமைப்பினால் நிறுவப்பட்ட குறித்த சிலையை மட்டக்களப்பு மாநகர மேயர் தியாகராசா சரவணபவன் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார்.

கிழக்கு பல்கலை கழக சுவாமி விபுலானந்தா அழகியற் கற்கைகள் நிறுவக பணிப்பாளர் கலாநிதி பாரதி கென்னடி காத்தான்குடி பொலிஸ் நிலைய போதை ஒழிப்பு பிரிவு பொறுப்பதிகாரி ஏ.எம்.சீ.ஜவாஹிர் உட்பட பெருமளவிலான பிரமுகர்கள் கலைஞர்கள் பலர் அதிதிகளாகக் கலந்து கொண்டனர்.

மறைந்த புகழ் பெற்ற மாஸ்டர் சிவலிங்கம் அவர்கள் மாணவர்களுக்கு கதை சொல்வதனூடாக சிறந்த சமுதாயமொன்றைக் கட்டியெழுப்பியவர்.

இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபனம் மற்றும் இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனங்களிலும் தொடர்ந்து சிறுவர் கதை சொல்லும் நிகழ்ச்சியை நடாத்தியவர் என்பது குறிப்பிடத்தக்கது.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முகநூலில் நாம்