கதிர்காமம் கந்தன் ஆலயத்தின் ஆடிவேல் உற்சவம் இன்று ஆரம்பம்!

வரலாற்று சிறப்புமிக்க கதிர்காமம் கந்தன் ஆலயத்தின் ஆடிவேல் உற்சவம் இன்று ஆரம்பமாகவுள்ளது.

கதிர்காம கந்தன் ஆலயத்தின் பஸ்நாயக்க நிலமே தில்ருவன் ராஜபக்ஷ இதனை தெரிவித்துள்ளார்.

இன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமாகும் மஹோற்சவம் எதிர்வரும் 4 ஆம் திகதி மாணிக்க கங்கையில் இடம்பெறவுள்ள தீர்த்தோற்சவத்துடன்; நிறைவு பெறவுள்ளது.

இந்தநிலையில் இன்று முதல் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 4 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் இடம்பெறவுள்ள ஆடிவேல் உற்சவத்தை பார்வையிட பொதுமக்கள் மற்றும் யாத்திரிகர்களுக்கு முற்றாக தடை விதிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் நோக்கில் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

முகநூலில் நாம்