கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் நடிகைக்கு திருமணமா? கல்யாணம் குறித்து அவரே கூறிய பதிவு!

இந்த வருடம் வந்த படங்களில் நல்ல ஹிட் படங்களில் ஒன்று கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால். தேசிங் பெரிய சாமி இயக்கத்தில் துல்கர் சல்மான், கௌதம் மேனன், ரிது வர்மா, ரக்‌ஷன் என பலர் நடித்திருந்தனர்.

கலக்கலான ஜாலி திரில்லர் படமாக இப்படம் அமைந்திருந்தது. இதில் ஹீரோயினாக ரிது வர்மா நடித்திருந்தார்.

தற்போது அவரும் கொரோனா ஊரடங்கை கடைபிடித்து வருகிறார். இந்நிலையில் அவர் அண்மையில் தெலுங்கு ஊடகம் ஒன்றிற்கு அளித்து பேட்டியில் திருமணம் பற்றி கூறியுள்ளார்.

இதில் அவர் தன்னுடைய பெற்றோர் தன் திருமணத்திற்காக காத்திருப்பதாகவும், நான் அதற்கு இன்னும் நேரம் இருக்கிறது, எனக்கு பொருத்தமானவரை கண்டுபிடித்ததும் திருமணம் செய்துகொள்வேன், காதல் திருமணத்தை எதிர்பார்க்கிறேன் என கூறியுள்ளார்.

முகநூலில் நாம்