கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் உலகம் முழுவதும் பிரமாண்ட வசூல், ஹிட் வரிசையில் இடம்பிடித்தது

துல்கர் சல்மான் நடிப்பில் தேசிங்கு இயக்கத்தில் சமீபத்தில் திரைக்கு வந்த படம் கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால். இப்படத்திற்கு பெரியளவில் ஓப்பனிங் இல்லை.

ஆனால், படத்தின் பாசிட்டிவ் விமர்சனங்கள் அடுத்தடுத்த நாளில் கூட்டம் வர காரணமாக அமைந்தது.

இதை தொடர்ந்து இப்படம் திரையிட்ட அனைத்து இடங்களிலும் கடந்த இரண்டு வாரங்களாக ஹவுஸ்புல் காட்சிகளாக வெற்றி நடைப்போடுகின்றது.

இந்நிலையில் கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் உலகம் முழுவதும் ரூ 15 கோடி வரை வசூல் செய்துள்ளதாக கூறப்படுகின்றது.

படத்தின் பட்ஜெட் மற்றும் எதிர்ப்பர்ப்பு இதையெல்லாம் வைத்து பார்த்தால் கண்டிப்பாக இவை செம்ம பிரமாண்ட வசூல் தான்.

தமிழகத்தில் ஏற்கனவே இப்படம் ஹிட் வரிசையில் இடம்பிடித்துவிட்டது, இதை தொடர்ந்து ரூ 10 கோடி வரை இப்படம் வசூல் செய்யும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

தெலுங்கில் இப்படம் நாளுக்கு நாள் காட்சிகள் அதிகரித்துக்கொண்டே வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.

முகநூலில் நாம்