கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் வசூல் நிலவரம் இதுதான்! 4 நாட்கள் லிஸ்ட் இதோ

இயக்குனர் கௌதம் மேனன் ஒரு போலிஸ் அதிகாரி வேடத்தில் நடிகராக கடந்த வாரம் வெள்ளிக்கிழமை வெளியான படம் கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்.

துல்கர் சல்மான், ரிதுவர்மா ஹீரோ ஹீரோயின் என்றால் மற்றொரு ஜோடியாக பிரபல நிகழ்ச்சி தொகுப்பாளர் ரக்‌ஷன் மற்றும் நிரஞ்சினி நடிக்க தேசிங் பெரிய சாமி இப்படத்தை இயக்கியுள்ளார்.

படத்திற்கு ஊடக தரப்பில் நல்ல விமர்சனங்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பும் பெற்றுள்ளது. காதல், காமெடி, துப்பறிதல் என பல விசயங்கள் இப்படத்தில் இருக்க ரசிகர்களுக்கு ஒரு ஜாலி ரைடு போல தான்.

ரூ 10 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டுள்ள இந்த படம் சென்னையில் மட்டும் 4 நாட்களில் ரூ 98 லட்சம் வசூலித்துள்ளது.

நாள் வாரியாக இப்படம் எவ்வளவு வசூலித்துள்ளது என பார்க்கலாம்..

  • வெள்ளி – ரூ 13 லட்சம்
  • சனி – ரூ 31 லட்சம்
  • ஞாயிறு – ரூ 35 லட்சம்
  • திங்கள் – ரூ 18 லட்சம்

குறைவான வசூலில் தொடங்கி பின் இருமடங்காக அதிகரித்து கடைசியில் பாதியாக குறைந்துள்ளதை காணமுடிகிறது.

முகநூலில் நாம்