கண்டுபிடிக்கப்பட்டுள்ள கொரோனா தடுப்பூசியை தொற்றாளர்களுக்கு செலுத்த அனுமதி..!

இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள இரு கொரோனா தடுப்பூசிகளை தொற்றாளர்களுக்கு செலுத்தி பரிசோதிக்க இந்திய மருந்து கட்டுப்பாட்டு சபை அனுமதி வழங்கியுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஐதராபாத்தை சேர்ந்த பாரத் பயோடெக் நிறுவனம் கோவேக்சின் என்ற தடுப்பூசியையும், ஆஹமதாபாத்தை சேர்ந்த ஜைடஸ் கேடிலா நிறுவனம் ஜைகோவ்-டி என்னும் தடுப்பூசியையும் கண்டுபிடித்துள்ளன.

குறித்த இரு தடுப்பூசிகளையம் மருத்துவர்கள் மிருகங்களுக்கு செலுத்தி பரிசோதனை செய்துள்ளனர்.

இதன்போது குறித்த தடுப்பூசிகள் நோய் எதிர்ப்பு சக்தியை வழங்கும் என நிரூபிக்கப்பட்டதை தொடர்ந்து இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்துள்ள தடுப்பூசி, கொரோனா வைரஸ் திரிபுவில் இருந்து உருவாக்கப்பட்டுள்ளதாகவும். ஜைடஸ் கேடிலா நிறுவனத்தின் தடுப்பூசி, டி.என்.ஏ. அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலகில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை   1,36,81,783  உயர்வடைந்துள்ளது.

உயிரிழந்வர்களின் எண்ணிக்கை 586,136 ஆக பதிவாகியுள்ளது.

தொடர்ந்தும் அதிகமானவர்கள் பிரேசில் நாட்டில் உயிரிழந்துள்ளதுடன் கடந்த 24 மணித்தியாலத்தில் உயிரிழந்துள்ளவர்களின் எண்ணிக்கை ஆயிரத்து 261 பேராக பதிவாகியுள்ளது.

இதற்கமைய உயிரிழந்துள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 75 ஆயிரத்து 523 பேராக பதிவாகியுள்ளதுடன் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை ஆக பதிவாகியுள்ளது.

இரண்டாவதாக அதிகமான உயிரிழந்தவர்களில் அமெரிக்கா பதிவாகியுள்ளதுடன் கடந்த 24 மணித்தியாலத்தில் 962 பேராக பதிவாகியுள்ளது.உயிரிழந்துள்ளர்களின் மொத்த எண்ணிக்கை 140,105 பேராக உயர்வடைந்துள்ளது.

அமெரிக்காவில் தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 3,615,991 ஆக பதிவாகியுள்ளது.

இந்தியாவில் உயிரிழந்துள்ளவர்களின் எண்ணிக்கை 24 ஆயிரத்து 929 பதிவாகியுள்ளதுடன் தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 970,169 பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முகநூலில் நாம்