கண்டி மாவட்டத்தில் 3,800 பேர் பாதிப்பு

கண்டி மாவட்டத்தில் 850 குடும்பங்களைச் சேர்ந்த  3,800 பேர் இது வரை இயற்கை அனர்த்தம் காரணமாக பாதிக்கப்பட்டுள்ளதாக கண்டி மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலைய உதவிப்ப பணிப்பாளர் தேசப்பிரிய பண்டார தெரிவித்தார்.

அவர் கண்டியில் வைத்து இது பற்றி மேலும் தெரிவிக்கையில், கடந்த 24 மணித்தியாலங்களில் நாட்டில் நாளாபக்கத்திலும் கடும் மழை பெய்த அதே நேரம் கண்டி மாவட்டத்தில் பல இடங்களிலும் 100 மில்லி மீட்டருக்கும் அதிகமான மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளது.

கண்டி மாவட்டத்திலுள்ள 14 பிரதேச செயலாளர்கள் பிரிவுகளில் மேற்படி சேதங்கள் ஏற்பட்டுள்ளது.

மேலும், தொலுவ, பஸ்பாகே கோரளை, உடபலாத்த, தெல்தொட்டை, மெததும்பறை மற்றும் கங்க இஹலகோரளை  போன்ற பிரதேச செயலாளர் பிரிவுகளில் மிக அவதானமாக உள்ளோம் என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முகநூலில் நாம்