
கிளிநொச்சி தருமபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கண்டாவளை கோணங்குளம்
பகுதி வீடொன்றிலிருந்து இடியன் துவக்கு 3, கட்டுத்துவக்கு 11, இடியன்
துவக்கின் பட் 5, ரி56 துப்பாக்கி தோட்டாக்கள் 250, ஈய குண்டுகள் 8,
பட்டாசு வெடிகள் 16, பன்றி இறைச்சி 8 கிலோ, உடும்பு தோல் 1 போன்ற
பொருட்களுடன் 31 வயது இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இராணுவ புலனாய்வுத்துறையினருக்கு கிடைத்த இரகசிய தகவலை அடுத்து கிளிநொச்சி
57 படைப்பிரிவின் கீழ் உள்ள 9 வது சிங்க படைப்பிரிவு விசேட
அதிரடிப்படையினர் மற்றும் வன ஜீவராசி திணைக்களம் இணைந்து சந்தேகத்துக்கு
இடமான வீட்டை சோதனையிட்ட போதே வீட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த
மேற்படி பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை தருமபுரம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றார்கள்.