கணவரைக் கொன்று வீட்டில் புதைத்த மனைவி

தகராறு காரணமாக ஒரு பெண் தனது கணவரைக் கொன்று வீட்டில் புதைத்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.

இந்தியா உத்திரபிரதேச மாநிலம் ஷாஜகான்பூரில், காடியா ரங்கன் காவல் நிலையத்திற்கு உட்பட்ட கமாரியா கிராமத்தைச் சேர்ந்த ஷில்பி என்பவர், தனது கணவர் கோவிந்துடன் ஒகஸ்ட் 7ம் திகதி சண்டையிட்டிருக்கிறார்.

பின், அவரைக் கொன்று, வீட்டில் குழி தோண்டி அங்கேயே புதைத்துள்ளார்.

ஆனால், தனது கணவர் தற்கொலை செய்து கொண்டதாக அந்த பெண் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.

சந்தேகம் அடைந்த பொலிசார் தொடர்ந்து விசாரணை நடத்தியதில், உண்மை சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசத் தொடங்கிய பிறகுதான் விஷயம் தெரிய வந்தது. அதன்பிறகு, நாசிக்கில் வசிக்கும் இறந்தவரின் தாயாருக்கு உள்ளூர்வாசிகள் தகவல் கொடுத்ததாக மகாராஷ்டிர பொலிசார் தெரிவித்தனர்.

முதற்கட்ட விசாரணையின் போது, ​​தனது கணவர் குடிப்பழக்கம் உள்ளவர் என்றும், ஞாயிற்றுக்கிழமை அவர்களுக்குள் சண்டை நடந்ததாகவும் அந்த பெண் பொலிசாரிடம் தெரிவித்தார்.

மேலும், வீட்டின் மொட்டை மாடியில் தூங்கச் சென்றதாகவும், கணவர் கீழே தூங்கியதாகவும் அந்த பெண் கூறியுள்ளார். இரவில், அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் என்றும், இதனால் பயந்து போய் வீட்டில் குழி தோண்டி உடலை புதைத்ததாக அந்த பெண் கூறியுள்ளார்.

சடலம் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும், இது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முகநூலில் நாம்