கட்டுநாயக்க விமான நிலையத்தில் இன்று முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ள புதிய திட்டம்!

தென்கொரியாவில் இருந்து நேற்று பிற்பகல் 256 பயணிகளுடன் கொரியன் விமான சேவைக்கு சொந்தமான விமானம் ஒன்று கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு சென்றடைந்துள்ளது. அத்துடன் சீனாவின் ஷங்ஹாய் நகரில் இருந்து இலங்கை வந்த 132 பயணிகளும் கட்டுநாயக்க விமான நிலையத்தில் விசேட முனையம் ஊடாக பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர்.

எனினும் அவர்களுள் எவருக்கும் நோய் அறிகுறிகள் தென்படவில்லை என விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் இத்தாலியில் இருந்து இலங்கைக்கு வரும் பயணிகள், கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் விசேட சோதனைக்கு உட்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் அவர்களை 14 நாட்களுக்கு தொடர்ந்து கண்காணிப்பதற்கு தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது அத்துடன் இந்த திட்டம் இன்று திங்கட்கிழமை முதல் நடைமுறைப்படுத்தப் படவுள்ளதாக சுகாதார அமைச்சின் பிரதான தொற்று நோயியல் நிபுணர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார்.

முகநூலில் நாம்