
கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் அனுமதியற்ற விதத்தில் தங்கியிருந்த 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக விமான நிலைய பொலிஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பொலிஸ் விஷேட அதிரடிப்படையினர் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் மேற்கொண்ட சோதனையின் போதே குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட நபர்களில் 4 பேர் சட்ட விரோத தரகர்கள் என ஆரம்பகட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.
இது தொடர்பில் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலைய பொலிஸ் அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.