கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையம் தொடர்பில் வெளிவந்த செய்தி

ஆகஸ்ட் முதலாம் திகதிக்கு முன்னதாகவே கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை திறப்பது குறித்து அரசாங்கம் ஆலோசித்து வருகிறது.

சிவில் விமான சேவைகள் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க இதனை தெரிவித்தார்.

வத்தளை மற்றும் நீர்கொழும்பு ஆகிய பிரதேச சபை உறுப்பினர்களை சந்தித்த அமைச்சர் ஊடகங்களிடம் கருத்து தெரிவிக்கும் போதே இதை குறிப்பிட்டார்.

கொரோனா வைரஸ் காரணமாக நாட்டின் அனைத்து விமான நிலையங்களும் மூடப்பட்டு இருந்தன.

இந்த நிலையில் ஸ்ரீலங்காவில் கொரோனாவின் தாக்கம் குறைவடைந்துள்ள நிலையில் ஆகஸ்ட்டில் விமான நிலையங்களை திறப்பதற்கு தீர்மானிக்கப்பட்டது.

இந்த நிலையிலேயே கட்டுநாயக்க விமான நிலையத்தை அதற்கு முன்னதாகவே திறப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகின்றது.

முகநூலில் நாம்