கட்டுநாயக்கவில் திறக்கப்பட்ட விசேட ஆய்வுக் கூடம்!

கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு வரும் பயணிகளுக்கு இலவசமாக PCR பரிசோதனை மேற்கொண்டு அறிக்கையை பெற்றுக்கொள்வதற்கான விசேட ஆய்வுக் கூடம், இன்று (09) முற்பகல் திறந்துவைக்கப்பட்டது.

இதில் PCR பரிசோதனையை செய்யும் இரண்டு கருவிகளும், தன்னியக்க சேவையை வழங்கும் இரண்டு கருவிகளும், பாதுகாப்பு அறைகள் மூன்றும் உள்ளன.

இதன் ஊடாக, தினமும் 500 பயணிகளுக்கு இதில் சேவையை பெற்றுக்கொள்ளவும் முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

முகநூலில் நாம்