
கட்டுநாயக்க ஏவரியவத்த பிரதான வீதி ஹீனடியன பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த விடயம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
விபத்து நேற்று இரவு இடம்பெற்றுள்ளதாகவும், இதன் போது பெண் ஒருவர் உயிரிழந்ததோடு, 16 பேர் காயமடைந்துள்ளனர் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கெப் ரக வாகனமொன்று மின் கம்பத்துடன் மோதியதில் இந்த விபத்து இடமபெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளதோடு, மேலதிக விசாரணைகளையும் மேற்கொள்வதாக தெரிவித்தனர்.