கட்டாரில் கஞ்சன முக்கிய சந்திப்பு

மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர, கட்டார் அபிவிருத்தி நிதியத்தின் பிரதி பணிப்பாளர் நாயகத்தை சந்தித்துள்ளார்.

பெட்ரோலியம் மற்றும் எரிவாயு விநியோகத்திற்குக் கிடைக்கும் கடன் வசதிகள் குறித்து இந்தக் சந்திப்பின் போது கலந்துரையாடப்பட்டதாக அமைச்சர் தெரிவித்தார்.

அமைச்சர் கஞ்சன விஜேசேகர தனது டுவிட்டர் கணக்கில் பதிவு ஒன்றை பதிவிட்டு இதனைத் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, கட்டாருக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர, அந்நாட்டு எரிசக்தி இராஜாங்க அமைச்சர் மற்றும் கட்டார் எரிசக்தி நிறுவனத்தின் தலைவரை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முகநூலில் நாம்