
பயண நடவடிக்கைகளின் போது கட்டாய தடுப்பூசி பெற்றிருப்பதற்கான நிபந்தனைகளை தளர்த்த கனேடிய அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
இதற்கமைய, உள்ளூர் விமான மற்றும் ரயில் பயணங்களின் போதும், சர்வதேச வெளிச் செல்லும் பயணங்களின் போதும் கொரோனா தடுப்பூசியை பெற்றிருப்பது கட்டாயமில்லை என கனடா தெரிவித்துள்ளது.
அத்துடன், புதிய கொரோனா திரிபு கண்டறியப்படும் பட்சத்தில் மீண்டும் கட்டாய தடுப்பூசி நிபந்தனையை மீள அமுல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கனடா குறிப்பிட்டுள்ளது.