கட்டழகான உடலுடன் மிரட்டான தோற்றம்! நடிகர் விஷ்ணு விஷால் தானா இது? திடீர் மாற்றம்

வெண்ணிலா கபடி குழு படம் மூலமாக நம் மனங்களை கவர்ந்தவர் நடிகர் விஷ்ணு விஷால். பின் குள்ளநரி கூட்டம், முண்டாசு பட்டி என கேங்ஸ்டர் படங்களை கொடுத்தார்.

அதே வேளையில் வேலைனு வந்துட்டா வெள்ளக்காரன், சிலுக்குவார்பட்டி சிங்கம் என காமெடி கதைகளிலும் நடித்தவர் ராட்சஸன் படம் மூலம் ஆக்‌ஷன் ஹீரோவாக தன் திறமையை பதிவு செய்தார்.

தற்போது அவர் மனு ஆனந்த் இயக்கத்தில் FIR ஃபைசல் இப்ராஹிம் ரயிஸ் என்ற படத்தில் நடித்து வருகிறார். நேற்று இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது.

இதில் புல்வாமா தாக்குதல், இலங்கை தாக்குதல் போன்ற சம்பவங்களை பிரதிபலிக்கும் விதமாக அமைந்தது.

இப்படத்திற்காக விஷ்ணு உடல் எடை குறைத்து கட்டழகாக்கியுள்ளார்.

முகநூலில் நாம்