
திஸ்ஸமகாராம – ரன்மினிதென்ன பகுதியில் கட்டளையை மீறி பயணித்த முச்சக்கர வண்டி மீது பொலிஸார் துப்பாக்கிச்சூடு மேற்கொண்டதில் இளைஞர் ஒருவர் காயமடைந்துள்ளார்.
கடமைகளில் ஈடுபட்டிருந்த பொலிஸ் விசேட மோட்டார்சைக்கிள் பிரிவினர் நேற்றிரவு 09 மணியளவில் குறித்த முச்சக்கரவண்டியை சோதனையிடுவதற்காக நிறுத்தியுள்ளனர்.
எனினும், முச்சக்கரவண்டி கட்டளையை மீறி பயணித்ததால், பொலிஸார் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர்.
சம்பவத்தின் போது 17 வயதான இளைஞர் காயமடைந்துள்ளார்.
தோள்பட்டையில் காயமடைந்த நிலையில், அவர் திஸ்ஸமகாராம வைததியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
கட்டளையை மீறி பயணித்த முச்சக்கர வண்டியின் சாரதியான, இளைஞரின் தந்தை கைது செய்யப்பட்டுள்ளார்.