கடவுளுடன் கைகுலுக்கியது போன்று உணர்ந்தேன் – யுவராஜ்சிங்

இந்திய கிரிக்கெட் அணி ஜாம்பவான் சச்சின் தெண்டுல்கர் டுவிட்டரில் “ யுவராஜ்சிங்கால் உலகில் எந்த மைதானத்திலும் சிக்சர் அடிக்க முடியும் என்றும் அவரை புகழ்ந்து ஒரு டுவிட் வெளியிட்டு இருந்துள்ளார். இதற்கு நன்றி தெரிவித்து யுவராஜ்சிங் “நான் உங்களை முதன்முதலில் சந்தித்து கைகுலுக்கியதை, கடவுளுடன் கைகுலுக்கியது போன்று உணர்ந்தேன்.

கடினமான காலக்கட்டங்களில் உறுதுணையாக இருந்து என்னை வழிநடத்தினீர்கள். என் திறமை மீது நம்பிக்கை வைக்க கற்று கொடுத்தீர்கள். மேலும் என்னை ஊக்கப்படுத்தி முன்னேற்றப் பாதைக்கு செல்ல நீங்கள் செய்த அனைத்து விஷயங்களையும், நானும் மற்ற இளைஞர்களுக்கு செய்வேன். உங்களுடன் இன்னும் பல மறக்க முடியாத அற்புதமான நினைவுகளை எதிர்பார்க்கிறேன்” டுவிட்டர் பதிவில் கூறியுள்ளார.

முகநூலில் நாம்