கடலில் மீனுக்கு விரித்தவலையை எடுக்கச்சென்றவேளை நிகழ்ந்த பேரனர்த்தம்

சிறு கடலில் மீனுக்கு விரித்தவலையை மீட்கச் சென்றவேளை இடம்பெற்ற விபத்தில் பரிதாபமாக தந்தை உயிரிழக்க மகன் மயிரிழையில் உயிர் தப்பியுள்ளார்.

புத்தளம் முள்ளிபுரம் பகுதியிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது

வலையை மீட்க சென்ற போது காற்றின் வேகம் அதிகரித்துள்ளது. இதனால் படகு அசைந்ததால் படகிலிருந்து தந்தை கடலில் தவறி வீழ்ந்துள்ளார். இதன்போது மகன் தந்தையை காப்பாற்ற முற்பட்டபோது மகனும் கடலில் வீழ்ந்துள்ளார்.

இதேவேளை தந்தையும் மகனும் நீச்சல் அடித்து கரைக்கு செல்ல முற்பட்டவேளை தந்தைக்கு நீச்சல் அடிப்பதற்கு முடியாமல் போயுள்ளதால் கடலில் மூழ்கியுள்ளார். இதேவேளை மகன் நீச்சல் அடித்துக் கொண்டு மாம்புரி கடற்கரையை சென்றடைந்துள்ளார்.

முகநூலில் நாம்