கடலட்டை பண்ணைகள் தொடர்பில் இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு

அனுமதியற்ற கடலட்டை பண்ணைகளால் அப்பகுதியில் இருந்து வெளியேறவேண்டிய நிலை
ஏற்பட்டுள்ளது இதனை தடுத்துமாறு இலங்கை மனித உரிமை ஆணைக்குழு யாழ்
அலுவலகத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

மெலிஞ்சி முனை கடற்தொழிலாளர்களால் இந்த முறைப்பாடு இன்று திங்கட்கிழமை
முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது .

அந்த முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது.

ஊர்காவற்றுறை பிரதேச செயலர் பிரிவிற்கு உட்பட்ட பருத்தித்தீவு அண்ணளவாக
50 ஏக்கர் கடலட்டை பண்ணை அமைக்கப்பட்டுள்ளது. இதனால்  ஊர்காவற்றுறை
பிரதேச கடற்றொழிலாளர்களின்

வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. இப்பிரதேசம் பவளப்பாறைகள் நிறைந்த மீன்
இனப்பெருக்கம் செய்யும் இயற்கை வளங்கள் நிறைந்த பிரதேசங்களாகவும்
காணப்படுவதோடு, இப்பிரதேச  மீன் பிடியாளர்களாகிய நாங்கள் இச்
செயற்பாட்டினால் இப்பிரதேசத்திலிருந்து வெளியேறக்கூடிய சூழ்நிலை ஏற்படும்
எனவும் எந்தவித விஞ்ஞான ஆய்வுகளும்  அனுமதிகளுமின்றி கடலட்டை பண்ணை
அமைக்கப்பட்டுள்ளது.

மேலும்  இப்பிரதேசத்தில் சட்டவிரோத கடலட்டை பண்ணைகள் அமைக்கப்பட்டால்
சிறு மீன்பிடி தொழிலாளர்களாகிய நாம் பிரதேசத்தை விட்டு வெளியேற சூழ்நிலை
ஏற்படும்.

எனவே இப்பிரதேசத்தில் வாழ்ந்து வாழ்வாதாரமாக கடற்தொழில் புரிந்து
வாழ்வாதாரத்தை உயர்த்துவதற்கான உரிமையைப் பெற்றுத் தருமாறு   கோரி
முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முகநூலில் நாம்