கடற்கரை கரப்பந்தாட்ட வீரர்கள் இருவர் தலைமறைவு

பேர்மிங்ஹாம் 2022 பொதுநலவாய விளையாட்டு விழாவில் பங்குபற்ற இலங்கையிலிருந்து இங்கிலாந்துக்கு சென்ற 161 பேரில் 6 பேர் தலைமறைவாகி உள்ளதாக இலங்கை குழாத்தின் பொறுப்பதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

ஏற்கனவே நால்வர் தலைமறைவான நிலையில் நேற்று முன்தினம் இரவு மேலும் இரண்டு இலங்கை வீரர்கள் தலைமறைவாகியுள்ளனர்.

கடற்கரை கரப்பந்தாட்டப் போட்டியில் கால் இறுதிவரை முன்னேறிய அஷேன் ரஷ்மிக்க, ஷஷிமல் மலின்த ஆகிய இருவரே கடைசியாக தலைமறைவான இலங்கை வீரர்களாவர்.

ஜூடோ அணி முகாமையாளரும் இலங்கை ஜூடோ சம்மேளனத் தலைவருமான அசேல டி சில்வா முதன் முதலில் தப்பிச்சென்றவாராவார்.

அவரைத் தொடர்ந்து ஜூடோ வீராங்கனை சமிலா டிலானி, மல்யுத்த வீரர் ஷனித் சத்துரங்க, குத்துச்சண்டை வீரர் விற்றாலி நிக்லஸ் ஆகியோர் தலைமறைவாகினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முகநூலில் நாம்