கடன் மறுசீரமைப்பு தொடர்பாக டிசெம்பர் மாதத்திற்குள் இணக்கப்பாடுஎட்டப்படும் – ரணில்

கடன் மறுசீரமைப்பு தொடர்பாக எதிர்வரும் டிசெம்பர் மாதத்திற்குள்இணக்கப்பாடு எட்டப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக ஜனாதிபதி ரணில்விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் கிறிஸ்டினாஜோர்ஜீவாவுடன் தாம் மேற்கொண்ட கலந்துரையாடல்கள் தொடர்பில் இன்று(வியாழக்கிழமை) நாடாளுமன்றத்தில் விளக்கமளிக்கும்போதே ஜனாதிபதி இதனைக்குறிப்பிட்டுள்ளார்.இந்த சந்திப்பின்போது, இலங்கைக்கு அதிகபட்ச ஆதரவை வழங்குவதாக அவர்உறுதியளித்துள்ளதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.மேலும் உலக வங்கியும் இலங்கைக்கு ஆதரவை வழங்குவதாகஉறுதியளித்துள்ளதாகவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேலும் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முகநூலில் நாம்