ஓரின சேர்க்கையாளருக்கு எதிரான வழக்கு தள்ளுபடி

வெலிசர – மஹாபாகே பகுதியைச் சேர்ந்த ஓரின சேர்க்கையாளர் (லெஸ்பியன்) ஒருவருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கை வத்தளை நீதவான் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது

 ஓரினச்சேர்க்கை மனதின் நோயோ அல்லது குற்றமோ அல்ல என்று பிரதிவாதி தரப்பு வழக்கறிஞர் சமர்ப்பித்ததை நீதிமன்றம் ஏற்றுக்கொண்டதையடுத்து வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.

22 வயதான ஓரின சேர்க்கையாளரான பெண்ணுக்கு எதிராக வத்தளை நீதவான் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது. பாதிக்கப்பட்ட பெண்ணின் பெற்றோர் வெலிசர மஹாபாகே பொலிஸாரின் உதவியுடன் நீதிமன்றில் மனுவொன்றை தாக்கல் செய்தனர்.

அவர் லெஸ்பியன் என்பதால் மனநலம் பாதிக்கப்பட்டவர் என அறிவிக்கக் கோரி மனு தாக்கல் செய்தனர்.

பாதிக்கப்பட்ட பெண்ணின் பெற்றோர்கள் வயது வந்த பெண்ணை சட்டவிரோதமாக அடைத்துவைத்து, துஷ்பிரயோகம், துன்புறுத்தல் மற்றும் கட்டாய மதமாற்ற சேவைகளுக்கு உட்படுத்தப்பட்டனர் என்றும் நீதிமன்றத்தின் கவனத்துக்கு கொண்டுவரப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முகநூலில் நாம்