ஓமானில் தவிக்கும் 3 இலங்கைப் பெண்களை நாட்டிற்கு அழைத்து வருமாறு உறவினர்கள் கோரிக்கை

குருநாகலில் உள்ள முகவர் ஒருவர் மூலம் ஓமான் நாட்டிற்கு பணிப்பெண்
வேலைக்கு சென்ற 3 பெண்களை ஓமான் நாட்டில் தடுத்து வைத்திருப்பதாகவும்,
வேலைக்கு அனுப்பாமல் சாப்பாட்டிற்கு எவ்விதமான வசதியும் செய்து
கொடுக்காமல் இருப்பதாகவும் பாதிக்கப்பட்ட பெண்களின் உறவினர்
க.சந்திரிக்கா புஸ்பகுமாரி  யாழ். ஊடக அமையத்தில் ஊடகங்களுக்கு
தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

இது தொடர்பில் கடந்த 10ஆம் மாதம் 18 ம் திகதி பொலிஸாரிடம் முறைப்பாடு
பதிவு செய்ததாகவும், பொலிஸார் ஒரு மாத தவணையில் தீர்வு
பெற்றுத்தருவதாகவும் உறுதி அளித்தனர்.

எனினும் பொலிஸார் மீது தங்களுக்கு நம்பிக்கை இல்லை எனவும் அதனால் தான்
ஊடகங்களுக்கு தகவலை வழங்குவதாகவும் தெரிவித்திருந்தார்.

குருநாகல் பாணகம பகுதியில் இருக்கின்ற முகமது நலீம் என்ற முகவர் மூலம்
அனுப்பப்பட்ட பெண்களை திருப்பி நாட்டிற்கு அழைக்குமாறு கேட்டபோது முகவரோ
5 இலட்சம் பணம் தந்தால் மாத்திரம் திருப்பி நாட்டிற்கு அழைக்கலாம் என
தெரிவித்ததாகவும் உறவினர் க.சந்திரிக்கா புஸ்பகுமாரி  தெரிவித்திருந்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முகநூலில் நாம்