ஓமானிற்கு பெண்களை கடத்தும் கும்பலை சேர்ந்த பெண் கைது

ஓமானிற்கு இலங்கை பெண்களை கடத்தும் நடவடிக்கைகளுடன் தொடர்புள்ளபெண்ணொருவரை சிஐடியினர் கைதுசெய்துள்ளனர்.ஓமானிற்கு பெண்களை கடத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள கும்பலைகுறிப்பிட்ட பெண்ணே இயக்கினார்.அவர் சிஐடியினரிடம் சரணடைந்ததை தொடர்ந்து அவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.குறிப்பிட்ட பெண் குறித்து கடந்த சில வாரங்களாக விசாரணைகளைமுன்னெடுத்ததாக தெரிவித்துள்ள சிஐடியினர் அவர் தனது முகவரி என பதிவுசெய்திருந்த இடங்கள் எவற்றிலும் வசிக்கவில்லை என குறிப்பிட்டுள்ளனர்.எனினும் இன்று அவர் சரணடைந்துள்ளார், அவர் கைதுசெய்யப்பட்டுள்ளதைதொடர்ந்து இந்த விவகாரத்துடன் தொடர்புடைய மூவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முகநூலில் நாம்