ஒழுங்கற்ற வரவுகளை கொண்ட மாணவர்களை மீள கற்றல் செயற்பாடுகளில் இணைக்க நடவடிக்கை

கிளிநொச்சி – கண்டாவளை பிரதேசத்திற்கு உட்பட்ட பகுதிகளில் பாடசாலை செல்லாத மற்றும் ஒழுங்கற்ற வரவுகளை கொண்ட சிறார்களை மீள கற்றல் நடவடிக்கைகளில் இணைக்கும் செயற்பாடுகள் நேற்று முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இவ்வாறு பாடசாலை செல்லாத மற்றும் ஒழுங்கற்ற வரவுகளைக் கொண்ட மாணவர்களை மீள பாடசாலைகளில் இணைக்கும் செயற்பாடுகள் ஏனைய பிரதேசங்களிலும் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படவுள்ளதாக மாவட்ட செயலகத்தினால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முகநூலில் நாம்