ஒலிம்பிக்கை சீர்குலைக்க சைபர் தாக்குதல்

2018 குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளை சீர்குலைக்க நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டதாகவும், அதன் பின்னணியில் ரஷ்யாவின் இராணுவ புலனாய்வுப் பிரிவு இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாகவும் அமெரிக்காவும், பிரிட்டனும் திங்களன்று தெரிவித்துள்ளது.

சிறப்பு தொழில்நுட்பங்களுக்கான முதன்மை மையம் என்றும் அழைக்கப்படும் ரஷ்யாவின் ஜி.ஆர்.யு இராணுவ புலனாய்வுத் துறையின் 74455 பிரிவு இந்த தாக்குதல்களை நடத்தியதாக பிரிட்டனும், அமெரிக்காவும் கூறியுள்ளது. சைபர் தாக்குதலில் ஈடுபட்டமைக்காக  6 ரஷ்ய உளவுத்துறை அதிகாரிகள் மீது அமெரிக்க நீதித்துறை வழக்குப் பதிவும் செய்துள்ளது.

ரஷ்யாவின் ஜி.ஆர்.யு இராணுவ புலனாய்வுத் துறையின் முன்னாள் மற்றும் தற்போதைய உறுப்பினர்கள் 6 பேர், அழிவுகரமான மற்றும் அதிநவீன ஹெக்கிங் தாக்குதல்களை கடந்த 2015 முதல் 2019 வரை பல்வேறு இடங்களில் நடத்தியதாக அமெரிக்க நீதித்துறை கூறியுள்ளது.

உக்ரைன் பவர் கிரிட் மீது நடத்தப்பட்ட ஹெக்கிங்கால் சுமார் 1 பில்லியன் அமெரிக்க டொலர் இழப்பு ஏற்பட்டது. அதேபோல், குளிர் கால ஒலிம்பிக் மற்றும் பிரான்ஸ் தேர்தல் ஆகியவற்றை சீர்குலைக்கும் வகையில் கடும் சிக்கலை ஏற்படுத்தும் மால்வேர் மூலமாக ஹெக்கிங்கில் இவர்கள் ஈடுபட்டுள்ளனனர் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ஆதிக்கம் செலுத்த ரஷ்யா முயற்சிப்பதாக தொடர்ந்து குற்றச்சாட்டுகள் எழுந்த போதிலும் இது தொடர்பாக எந்த குற்றச்சாட்டுகளும் பதிவு செய்யபடவில்லை.

தென்கொரியாவில் நடைபெற்ற குளிர்கால ஒலிம்பிக் போட்டியின் போது அது தொடர்பான தரவுகளை கொண்ட கணிணிகளை ஹெக் செய்ததாகவும், பிரான்ஸ் ஜனாதிபதி தேர்தலின் போது, முக்கிய நபர்களின் மின்னஞ்சல் முகவரிகளை ஹெக்கிங் செய்து வெளியிட்டதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முகநூலில் நாம்