ஒரு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் இறுதிப் போட்டிக்கு தகுதி

ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடரின் இன்றை சூப்பர்-4 போட்டியில் ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் அணிகள் மோதின.

நாணய சுழற்சியை வென்ற பாகிஸ்தான் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

முதலில் துடுப்பெடுத்தாடிய ஆப்கானிஸ்தான் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 129 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.

அதிகபட்சமாக இப்ராகிம் ஜத்ரன் 35 ஓட்டங்கள் அடித்தார்.

பாகிஸ்தான் தரப்பில் ஹரிஸ் ராப் 2 விக்கெட் எடுத்தார்.

இதையடுத்து 130 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் அணி களமிறங்கியுள்ளது.

அதனடிப்படையில் பாகிஸ்தான் அணி 19.2 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்களை இழந்து வெற்றியிலக்கை அடைந்துள்ளது.

இதனால் ஒரு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முகநூலில் நாம்