ஒரு குடும்பத்தைச் சேர்ந்த மூவர் தற்கொலை முயற்சி! ஒருவர் உயிரிழப்பு: யாழில் சோகம்

யாழில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாய், அவரது மகள் மற்றும் மகளின் கணவர் ஆகியோர் நஞ்சு அருந்தி தற்கொலைக்கு முயற்சி செய்துள்ள நிலையில் குறித்த தாயார் உயிரிழந்துள்ளார்.

தென்மராட்சி, மட்டுவில் சந்திபுரம் வடக்கு செல்லப்பிள்ளையார் கோவிலடியில் வசிப்பவர்களே இவ்வாறு தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளனர். தாயார் உயிரிழந்த நிலையில் அவரது மகளும் மருமகனும் ஆபத்தான நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

அதிக வட்டிக்கு வாங்கிய கடனால் ஏற்பபட்ட நெருக்கடி நிலை காரணமாகவே இந்த உயிர்மாய்ப்பு முயற்சி இடம்பெற்றது என்று ஆரம்ப விசாரணைகளில் தெரியவருகிறது என்று பொலிஸார் தெரிவித்தனர்.

முகநூலில் நாம்