ஒருநாள் கிரிக்கெட் தொடர் பாகிஸ்தான் அணி அறிவிப்பு

சிம்பாப்வேக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரின் முதல் ஆட்டத்துக்கான பாகிஸ்தான் அணி பாபா் ஆஸம் தலைமையில் அறிவிக்கப்பட்டுள்ளது.

டெஸ்ட் அணி தலைவராக இருந்த பாபா் ஆஸம் ஒருநாள் தொடருக்கான தலைவராகியது இது முதல்முறை.

சிப்பாப்வே அணி தலா 3 ஒரு நாள் மற்றும் டி20 ஆட்டங்களில் விளையாட பாகிஸ்தான் வந்துள்ளது. முதல் ஒருநாள் ஆட்டம் வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது.

இதற்கான பாகிஸ்தான் அணியில் மூத்த வீரா் முகமது ஹபிஸ், இளம் வேகப்பந்து வீச்சாளா் முகமது ஹஸ்னைன், ஹைதா் அலி, அப்துல்லா ஷஃபிக் ஆகியோருக்கு இடம் கிடைக்கவில்லை. உப தலைவர் ஷதாப் கானும் காயம் காரணமாக இடம் பெறவில்லை.

அணி விவரம்: பாபா் ஆஸம் (தலைவர்), இமாமுல் ஹக், அபித் அலி, ஃபகாா் ஜமான், ஹரீஸ் சோஹைல், முகமது ரிஸ்வான் (விக்கெட் காப்பாளர்), இப்திகாா் அகமது, குஷ்தில் ஷா, ஃபஹீம் அஷ்ரஃப், இமத் வாசிம், உஸ்மான் காதிா், வஹாப் ரியாஸ், ஷஹீன்ஷா அப்ரிடி, ஹரீஸ் ரெளப், மூசா கான்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முகநூலில் நாம்