ஒன்லைன் ஊடாக ரயில் பயணச்சீட்டுக்கான முன்பதிவுகள்!

எதிர்வரும் மார்ச் மாதம் தொடக்கம் ரயில் பயணச்சீட்டை ஒன்லைன் ஊடாக விநியோகிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று ரயில்வே திணைக்களத்தின் பொது முகாமையாளர் டிலந்த பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

இதன் ஊடாக வெளிநாட்டில் உள்ளவர்களுக்கும் ரயில் பயணச்சீட்டை பெற்றுக் கொள்ள முடியுமெனவும் தெரிவித்துள்ளார். அனைத்து ரயில்வே நிலையங்களுக்கு அருகில் பேருந்து சேவைகளை ஆரம்பிப்பதற்காக ரயில் – பேருந்து கூட்டு சேவை வேலைத்திட்டமொன்றும் முன்னெடுக்கப்பட உள்ளதுடன், அனைத்து ரயில் நிலையங்களுக்கு அருகாமையிலும் சுமார் 100 வாகனங்கள் தரித்து நிற்கக்கூடிய வசதிகள் மேற்கொள்ளப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

முகநூலில் நாம்