ஒன்றரை வயது சிறுவன் நீர் பாசன கால்வாயில் விழுந்து பலி!

கிளிநொச்சி மருதநகர் பகுதியில் ஒன்றரை வயது சிறுவன் நீர்ப்பாசன வாய்க்காலுக்குள் வீழ்நத இறந்துள்ளான்.

குறித்த பகுதியைச் சேர்ந்த  நிசாந்தன் சபீசன் என்ற சிறுவனே இதன் போது உயிரிழந்துள்ளான் இச் சம்பவம் 04.06.2022 மாலை 6.00 மணியளவில் வீட்டின் அருகில்  இரணைமடு நீர்ப்பாசன வாய்க்கால் காணப்படுகிறது. தற்போது அவ்வாய்க்கால் சிறுபோக நெற்செய்கைக்காக திறந்து விடப்பட்டுள்ளது.

இதனால் அதிகளவு நீர் ஓடிக்கொண்டிருக்கிறது. இதற்குள் வீழந்த சிறுவன் வீழந்த இடத்திலிருந்து இரண்டு கிலோ மீற்றர்  தூரம் வரை நீரில் இழுத்துச் செல்லப்பட்டுள்ளதாக பொது மக்கள் தெரிவித்துள்ளனர்.  பின்னர் உயிரிழந்த நிலையில் அயலவர்களினால் உடல் மீட்கப்பட்டு கிளிநொச்சி வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக கிளிநொச்சி பொலிஸார் விசாரணைகளை மேட் கொண்டுவருகிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முகநூலில் நாம்