
இலங்கை தற்போது முகங்கொடுத்திருக்கும் நெருக்கடியிலிருந்து மீள்வதற்கு
அவசியமான அனைத்துவித ஒத்துழைப்புக்களையும் வழங்கத்தயாராக இருப்பதாக
பொதுநலவாய அமைப்பின் செயலாளர் நாயகம் பற்ரீஸியா ஸ்கொட்லன்ட்
உறுதியளித்துள்ளார்.
அரசாங்கத்தின் அழைப்பையேற்று சுதந்திரதின நிகழ்வில் பங்கேற்பதற்காக
இலங்கைக்கு வருகைதந்துள்ள பொதுநலவாய அமைப்பின் செயலாளர் நாயகம் பற்றீஸியா
ஸ்கொட்லன்ட், கொழும்பில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு
உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
நீங்கள் தனியாக அல்ல. நீங்கள் இந்த சிறப்பு வாய்ந்த பொதுநலவாயக்
குடும்பத்தின் ஒரு பகுதி என்பதற்காகவே தாம் இலங்கைக்கு வந்துள்ளதாக அவர்
குறிப்பிட்டார்.
இதேவேளை குடும்பம் என்ற ரீதியில் நாம் ஒருவருக்கொருவர் பொறுப்புக்கூற
வேண்டும் என்று குறிப்பிட்ட அவர் உலகளாவிய அமைப்புகளை விரிவுபடுத்தும்
நெருக்கடிகளின் சிக்கலான இடத்தில் அனைவரும் பிணைக்கப்பட்டுள்ளதாக
பற்ரீஸியா ஸ்கொட்லன்ட் தெரிவித்துள்ளார்.