ஒட்டுமொத்த வைத்திய பணிப்பாளர்களுக்கும் கொழும்புக்கு அழைப்பு

கொரேனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளில் நேரடியாக தொடர்புபட்டுள்ள 24 மருத்துவமனைகளில் கடமை புரியும் அனைத்து வைத்திய பணிப்பாளர்களும் நேற்று கொழும்புக்கு அழைக்கப்பட்டிருந்தனர்.

சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சியின் ஆலோசனையின் பேரில் இவர்கள் கொழும்புக்கு அழைக்கப்பட்டு இருந்தனர்.

இதன்போது நோய்த்தொற்றிலிருந்து பாதுகாப்பு பெறுவதற்கான நடவடிக்கைகள் தொடர்பில் சுகாதார அமைச்சர் ஆலோசனை வழங்கியுள்ளார்.

இந்த நோய்த்தொற்றானது எல்லா இடத்திலும் பரவி உள்ளது என்ற விடயம் இன்னமும் உறுதிப்படுத்தப்படவில்லை.

எனினும், நோய் பரவும் அபாயம் நாட்டில் உள்ளது என்பதை கூறிக்கொள்வதுடன் குறித்த தரப்பினருடன் தொடர்புகளை கொண்டிராமல் சமூகத்தில் உள்ள பெரும்பாலானோருக்கு இந்த நோய் தொற்று ஏற்படவில்லை என்றும் சுகாதார அமைச்சர் குறிப்பிட்டார்.

முகநூலில் நாம்