ஐஸ் போதைப் பொருளை தம்வசம் வைத்திருந்த சந்தேக நபரை கல்முனை விசேட அதிரடிப்படையினர் கைது

ஐஸ் போதைப் பொருளை தம்வசம் வைத்திருந்த சந்தேக நபரை கல்முனை விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர்.

அம்பாறை மாவட்டம் கல்முனை விசேட அதிரடிப்படை முகாமிற்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவல் ஒன்றினை அடுத்து செவ்வாய்க்கிழமை (23) இரவு காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கர்பலா வீதி அலியார் சந்தியில் வைத்து சந்தேக நபர் விசேட அதிரடிப்படையினர் மேற்கொண்ட தேடுதலில் கைதானார்.

இவ்வாறு கைதான நபர் 37 வயது மதிக்கத்தக்கவர் என்பதுடன் சந்தேக நபர் வசம் இருந்து ஐஸ் போதைப்பொருள் 5 கிராம் 10 மில்லி கிராம் விசேட அதிரடிப்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட நபர் சான்று பொருட்களுடன் நீதிமன்ற நடவடிக்கைக்காக பாரப்படுத்தியமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முகநூலில் நாம்