
மெக்சிக்கோவிலிருந்து மாத்தறைக்கு கடத்தி வரப்பட்ட ஐஸ் போதைப்பொருள் அடங்கிய பொதி சுங்க அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டது.
மாத்தைறயில் உள்ள நபருக்கு சந்தேகத்திற்கிடமான முறையில் இப்பொதி அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. சுங்கப் போதைப்பொருள் கட்டுப்பாட்டு பிரிவின் அதிகாரிகள் அதனை கொண்டு சென்றவரை தடுத்து நிறுத்தி சோதனையிட்டதில் 650 கிராம் மெத்தம்பெட்டமைன் ஐஸ் போதைப்பொருள் மறைத்து வைக்கப்பட்டிருந்தமை கண்டுபிடிக்கப்பட்டது.
இந்த பொதியை எடுத்துச் செல்ல வந்த சந்தேக நபரை, சுங்க போதைப் பொருள் கட்டுப்பாட்டு பிரிவின் அதிகாரிகள் கைது செய்தனர். இந்த மருந்துக ளின்பெறுமதி சுமார் 13 மில்லியன் என மதிப்பிடப்பட்டுள்ளது, மேலும், இது சமீபத்திய வரலாற்றில் மெக்சிகோவிலிருந்து கைப்பற்றப்பட்ட முதல் மெத் தம்பேட்டமைன் தொகையென தெரிவிக்கப்படுகிறது.
இது தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதுடன், காவல்துறை போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவின் அதிகாரிகளும் இதற்கு ஆதரவளித்து வருகின்றனர்.