ஐரோப்பிய ஒன்றியத்தின் நிதியுதவியில் கிளிநொச்சி, முல்லைத்தீவு, மட்டக்களப்பு 2370 வீடுகள் பூர்த்தி

கிளிநொச்சி மாவட்டத்தில் ஐரோப்பிய ஒன்றியத்தின் நிதியுதவியில் அமைக்கப்பட்ட இரண்டு வீடுகள் உத்தியோகபூர்வமாக  இலங்கை மற்றும் மாலைதீவுக்கான ஐரோப்பிய ஒன்றியத்தின்  உயர்தானிகர்  டெனிஸ் சாய்பி அவர்களும் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் ஆகியோர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டு புதிதாக அமைக்கப்பட்ட வீடுகளை  பயனாளிகளிடம் கையளித்தார்.


 ஐரோப்பிய ஒன்றியத்தின் நிதியுதவியில் கிளிநொச்சி, முல்லைத்தீவு மற்றும் மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களில் தலா 8 லட்சத்து 20 ஆயிரம் ரூபா பெறுமதியான சுமார் 2370 வீடுகள் புதிதாக அமைக்கப்பட்டு பூர்த்தி செய்யப்பட்டு கையளிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கவிடயம்.
இதே போன்று ஐரோப்பிய ஒன்றியத்தின் நிதியுதவியில் சுமார் 50 ஆயிரம் பேருக்கு சுயதொழில் மற்றும் வாழ்வாதாரம் உதவிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.


இன்  நிகழ்வில்  கபி டாட் போ ஹுமானிட்டி சிரிலாங்கா மற்றும் வேல்விசன் லங்கா நிறுவனங்களின் அதிகாரிகள், மாவட்ட செயலகத்தின் திட்டமிடல் பணிப்பாளர் கேதீஸ்வரன் கரைச்சி பிரதேச செயலகத்தின் திட்டமிடல் பணிப்பாளர் அமல்ராஜ், கிராம சேவகர் மற்றும் பயனாளிகள் என பலர் கலந்து கொண்டார்கள்  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முகநூலில் நாம்