ஐரோப்பாவை தாக்கிய புயலால் 12 பேர் பலி!

மத்திய மற்றும் தெற்கு ஐரோப்பாவை தாக்கிய சக்திவாய்ந்த புயலால் மூன்று சிறுவர்கள் உட்பட குறைந்தது 12 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதில் இத்தாலி, ஆஸ்திரியா மற்றும் பிரான்ஸ் தீவான கொர்சிகாவில் மரங்கள் விழுந்தே பலரும் உயிரிழந்துள்ளனர். ஐரோப்பா எங்கும் பல வாரங்களாக வெப்ப அலை மற்றும் வரட்சி தாக்கிய நிலையிலேயே இந்த புயலும் தாக்கியுள்ளது.

கோர்சிகாவில் மணிக்கு 224 கிலோமீற்றர் வேகத்தில் காற்று வீசியதில் வீதிகளில் மரங்கள் வேரோடு பிடுங்கப்பட்டு நடமாடும் வீடுகள் சேதமடைந்துள்ளன. முகாம் இருக்கும் தளம் ஒன்றில் மரம் விழுந்து 13 வயது சிறுமி கொல்லப்பட்டதாக அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். இதனையொத்த சம்பவத்தில் ஆடவர் ஒருவர் உயிரிழந்திருப்பதோடு கடற்கரை கூடாரத்தின் கூரை தாக்கி காரில் வந்த 72 வயது பெண் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார்.

மேலும் கடலுக்குச் சென்ற இரு மீனவர்கள் மற்றும் பெண் படகோட்டி ஒருவரும் உயிரிழந்துள்ளனர். தாவிர, ஆஸ்திரியா மற்றும் இத்தாலி நாடுகளிலும் உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முகநூலில் நாம்