ஐரோப்பாவில் முடக்கல் காரணமாக கொரோனாவிலிருந்து காப்பாற்றப்பட்ட சுமார் 30 இலட்சம் உயிர்கள்

கொரோனா வைரஸ் பரவலை அடுத்து ஐரோப்பாவில் மேற்கொள்ளப்பட்ட முடக்கல் காரணமாக சுமார் 30 இலட்சம் உயிர்களை கொரோனாவிடம் இருந்து காப்பாற்ற முடிந்ததாக ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது. லண்டனில் உள்ள கல்லூரி ஒன்றின் ஆய்வில் இது தெரிவிக்கப்பட்டுள்ளது.

முடக்கல் இல்லாதிருந்தால் உயிரிழப்புக்கள் பாரியளவில் இருந்திருக்கும் என்று அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் கொரோனாவின் தாக்கம் ஐரோப்பிய நாடுகளில் ஆரம்பக்கட்டத்திலேயே இருந்தமையால் குறைந்தளவான மக்களே அதனால் பாதிக்கப்பட்டதாக அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுவரை ஐரோப்பிய நாடுகளில் 130ஆயிரம் பேர் கொரோனவினால் காவுகொள்ளப்பட்டதாக லண்டன் கல்லூரி ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முகநூலில் நாம்